விதவை என்ற வார்த்தையில் பொட்டு
இல்லை என்றொரு கேள்வி எழுந்த போது
அதற்க்கு மாற்று வார்த்தை தமிழில் இருக்கிறது
அந்த வார்த்தையில் இரண்டு பொட்டுக்கள் உள்ளன
அந்த வார்த்தை "கைம்பெண் " என்றார்
கருணாநிதி.
இது நடந்து ஒரு பத்தாண்டுகளுக்கு மேல்
இருக்கும் அன்று நான் தமிழ் மொழியின்
வளம் குறித்து புளகாங்கிதம் அடைந்தேன்
அது நான் தமிழ் மொழி மீது கொண்டிருந்த கண்மூடித்தனமான
பற்று.
இன்று மொழி குறித்து பறந்து விரிந்த பார்வை எனக்கு வந்து இருக்கிறது
அந்த பார்வையை எனக்கு வழங்கியதில்
முக்கியமான பங்கு பெரியாருக்கு உண்டு
தமிழ் மொழி ஒரு காட்டுமிராண்டி மொழி என்பர் பெரியார்
அந்த பெரியாரின் வார்த்தையிலிருந்து தொடங்குகிறது என்னுடைய
தமிழ் மீதான பற்று சிதைவு பின்னர் மார்க்சியா நோக்கிலான மொழி குறித்த புரிதல்கள்
சில எனக்குள் மென்மேலும் தமிழ் மீதான சிதைவை எனக்குள் உண்டு பண்ணியது என்றால் மிகையில்லை
மொழி ஒரு உற்பத்தி கருவி என்ற கருத்து வில் எனக்கு மார்க்சிய பரிச்சியம் ஏற்பட்ட காலத்தில் உடன்பாடு இல்லாமல் இருந்த போதிலும் எனது வாசிப்பனுபவம் விரிய விரிய அந்த கருத்துவில் எனக்கு முழு உடன்பாடு ஏற்ப்பட்டது.
அதற்க்கு காரணம் ஒரு பொருள் உற்பத்தி ஆகும் போதே அதற்க்கான பெயரும் ஏற்ப்பட்டு விடுவது இயல்பானது தானே
மாட்டு வண்டி உள் நாட்டு தயாரிப்பு அதனால் அதற்க்கு தமிழிலேயே பெயர்க்காரணம் ஏற்ப்பட்டது, இது மாதிரி நிறைய உதாரணங்களை சொல்ல முடியும்.
பிறிதொரு மொழி பேசும் நாட்டில் உற்பத்தி செய்யக்கொடிய ஒரு பொருளுக்கு அந்த நாட்டு மொழியில் தானே பெயர் வைப்பார்கள். அதை நம் மொழிக்கு பெயர் மாற்றம் செய்வது மிகப்பெரிய அராஜகம்.
இப்படியான ஒரு புரிதலோடு எனக்கு மொழி குறித்த சிந்தனைகள் வலுப்பெற்று கொண்டிருக்கும் காலத்தில் தான்
பெரியார் நம் மொழி சாதி காப்பாற்று மொழி என்ற மேற்கோளை நிறப்பிரிகையில் வாசித்தேன் அந்த மேற்கோள் அவ்வப்போது எனக்குள் கேள்விகளையும் சிந்தனையையும் விரிவடைய செய்யும் அந்த வகையில் தான் கைம்பெண்ணுக்கு இரண்டு பொட்டுக்கள் உண்டு என்கிற கருணாநிதியின் கூற்றில் எனக்கொரு எதிர் கேள்வி பிறந்ததும்.
விதவை என்பது பெண் பால் வார்த்தை விதவன் என்கிற ஆண் பால் தமிழில் வார்த்தை கிடையாது
அதே போல கைம்பெண் பெண் பால் வார்த்தை கைமான் என்கிற ஆண் பால் வார்த்தை தமிழில் கிடையாது.
நம் மொழி சாதி காப்பாற்றும் வார்த்தை மாட்டும் இல்லை,
நம் மொழி ஆணாதிக்கம் காப்பாற்றும் மொழியும் கூட.
செம்மொழி மாநாட்டை மட்டுமல்ல
தமிழ் மொழியையும் நாம் எதிர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது
பெரியாரை சுமக்க வேண்டிய கடமை இருக்கிறது.
periyarin indri evaruku thunivu undu nam suyamariyadhayai sur endru uraithida avar endri inoruvar illamal ponathey namathu vizchi
ReplyDelete